சுகாதார அலுவலர் பதவி: காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

சுகாதார அலுவலர் பதவி: காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சுகாதார அலுவலர் பதவியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியிலுள்ள சுகாதார அலுவலர் (ஏங்ஹப்ற்ட் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பதவியில் 33 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of Sanitary Science) அல்லது Diploma in Public Health அல்லது Licentiate in Public Health அல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMP கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net என்ற ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி சென்னை மையத்தில் நடைபெறும்.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 9. மேலும் வயது வரம்பு, கல்வித் தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி