மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்; நடவடிக்கை எடுக்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்; நடவடிக்கை எடுக்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம்- ஆத்தூர் அருகே, அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த, அமைச்சரின் உறவினரான கணித ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கண்டன போராட்டம் நடத்தினர்.

ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 388 மாணவியர், தங்கி படிக்கின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவியரிடம், 5,000 ரூபாயும், மற்ற மாணவியரிடம், 3,000 ரூபாய் வரை, வசூல் செய்கின்றனர்.கணித ஆசிரியர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உடன் பிறந்த தங்கை செல்லமணி மகன் என்பதால், அவரது செயலை கண்டிக்கும் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.ஆசிரியர் கார்த்திகேயன், மாணவியரிடம், ஆபாச செய்கை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தும், ஒரு மாணவியை, காம்பஸ் கருவியில் குத்தி காயப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் கலாமோகினி, ஆசிரியர்கள் கார்த்திகேயன், முருகேசன் ஆகியோர் மீது, கடந்த, 7ம் தேதி, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள், சேலம் மாவட்ட கலெக்டரிடம், புகார் மனு அளித்தனர்.ஆசிரியர்கள் மீது, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று, ஆத்தூர் அருகே, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாபில், மலைவாழ் மக்கள் சங்க, மாநில தலைவர் சண்முகம் தலைமையில், கண்டன போராட்டம் நடந்தது.


2 comments:

  1. காலக்கொடுமை

    ReplyDelete
  2. கல்வி, கல்வியாளர்களின் கையில் இல்லை . சரி தானே?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி