அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு


அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக, ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
ஆண்டு தோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை காண்பிக்க பள்ளிகள் ஆர்வம் காட்டும் நிலையில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான ரேங்க் பெற, பள்ளிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்த 100 சதவீத தேர்ச்சி விகிதம் மற்றும் ரேங்க் பட்டியலில், அரசுப் பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.

சிறப்பு வகுப்பு :

உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில், 2 அல்லது 3 மணி நேரம், அவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, கல்வி போதிக்கின்றனர்.ஆனால், அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில், அத்தகைய கல்வி போதிப்பு முறை இல்லை; பள்ளி நாட்கள் தவிர, விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுவது இல்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளும் தேர்ச்சி விகிதம் மற்றும் மாவட்ட, மாநில ரேங்க் பட்டியலில் முன்னுக்கு வர, சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகளை நடத்த, மாவட்ட கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது; கடந்த 2 வாரமாக, பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும் வருகின்றன.

திடீர் ஞானோதயம் :

கல்வியாண்டின் துவக்கம் முதல், விடுமுறை நாள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வரும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்டுக் கொள்ளாமல், அவர்களை தட்டிக் கேட்காமல், வாய் மூடி கிடந்த, சில பொது நல ஆர்வலர்கள், அரசுப் பள்ளிகளில் ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் போது மட்டும் எதிர்ப்பு குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்."வாரத்துக்கு ஒரு நாள் தான் விடுமுறை; அதிலும்குழந்தைகளை கஷ்டப்படுத்த வேண்டுமா; குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர்; இதனால், பெற்றோர்களுக்கும் கஷ்டம்' என்பன, போன்ற காரணங்களை அவர்கள் கூறி வருகின்றனர்.

ஒருமித்த கருத்து :

விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித் துறையும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இதுகுறித்து, கலெக்டர் சங்கரிடம் கருத்து கேட்ட போது,""சமவெளி பிரதேசங்களில், இரவு வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது; ஆனால், நீலகிரியில் அவ்வாறு இல்லை.பத்து மற்றும் 12ம் வகுப்பு என்பது, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் வகுப்புகள். எனவே, விடுமுறை நாட்களில், சில மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களை தயார்படுத்துவதில் தவறு இல்லை; இதை பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர். சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூறி, பெற்றோர் பலரே யோசனை தெரிவிக்கின்றனர்; ஆசிரியர்கள் மனது வைத்தால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,'' என்றார்.பொதுத் தேர்வு நெருங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு என்பது, மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் பற்றுதலை தெரிந்து கொள்ளும் ஒரு "அக்னி பரீட்சையாக' மாறி உள்ளது.

38 comments:

  1. Nalla thittam mathippen ondrai thavira Matra entha visayaththilum arasupalli maanavargal salaiththavar alla. Matra maavatta palligalum konjam effort podalam

    ReplyDelete
  2. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. என் இனிய நண்பர்களே.
    காலை வணக்கம்.

    இன்று வழக்கு முடிக்கப்பட்டு நம் தோழர்களுக்கு நல்லது நடக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

    சமூக முன்னேற்றத்திற்காக அரசு வழங்கும் முன்னுரியை யாரும் தடுக்கமுடியாது. தடுக்கவும் விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
    இன்று ஒருவேளை நம்மை பாதிப்பதாக இருக்குமேயானால் நாம் உடன் நடவடிக்கைக்கு தயாராக இருக்கவேண்டும். ஒற்றுமையே பலம் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
    என் முழு ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் தர தயாராக இருக்கின்றேன். நண்பர்களே வாழ்த்துக்கள் வெற்றிபெறுவோம்.

    ReplyDelete
  4. COURT NO. 12

    HON'BLE MR.JUSTICE T.RAJA

    2. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
    To Implead
    MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY
    and
    WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM MR.VR.SHANMUGANATHAN
    (Service) K.ESAKKI SPL.GOVT. PLEADER
    TAKES NOTICE
    FOR RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
    To Implead
    MP(MD).5/2014 M/S.R.VENKATESAN
    To vacate stay
    MP(MD).6/2014 M/S.R.VENKATESAN
    To Implead
    MP(MD).7/2014 M/S.M.O.THEVAN KUMAR

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி திரு விஜயகுமார் சகோதரரே

      உங்கள் மின்னஞ்சலுக்கு என்னுடைய அலைபேசி எண்ணை அனுப்பி விட்டேன்

      Delete
  6. theerpu saathagam illaamal poga vaaipu irukkindratha nanbare

    ReplyDelete
  7. என்னைப்பொறுத்தவரை அரசு வெற்றிப்பெறும். வெற்றிப்பெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Dear Vijayakumar,

      திரு இராமர் மற்றும் திரு சுடலைமணி வழக்கை விசாரனைக்கு ஏற்று கொண்ட போதே, நடைமுறையில் உள்ளதையே பின்பற்றலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியும், பட்டியில் வெளியிடுவதில் இன்னும் என்ன சிக்கல் நீடிக்கிறது???

      Delete
    2. Illa sir ramar valakku thalai pirappikka villas. Sudalai valakkil thadai pirappitthu vittar

      Delete
    3. Akilan Sir please give your mobile number ..

      Delete
    4. My id is sujivisukutty@gmail.com

      Delete
    5. மிகவும் மகிழ்ச்சி திரு அலெக்ஸாண்டர் சாலமன் சகோதரரே

      சகோ திரு ராமர் வழக்கில் தான் முதலில் தடையாணை வழங்கப்பட்டது

      தற்போதைய நிலை என்பது தான் தடையாணை

      அதாவது அப்போதைக்கு எந்த தேர்வு பட்டியலும், பணி நியமன ஆணையும் வழங்கப்படாமல் இருந்தது அல்லவா அந்த நிலை தொடரட்டும் என்றுதான் நீதிபதி ஐயா அவர்கள் கூறி தடையாணை வழங்கினார்

      Delete
    6. நன்றி திரு அகிலன் அவர்களே

      Delete
  8. Gud morning frnds
    Vijay kumar chennai sir thanks for ur support sir.
    Pls frnds update the court details

    ReplyDelete
  9. Vetri kidaika vaalathukal,akilan sir@co.indrodu ungal kavalai mudinthu magaliche peruga iraivanai vendugiren

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்சி கோடிஸ்வரன் சம்பத் சகோதரரே

      உங்கள் பெயரில் இருப்பதுபோல் அன்பு, நல்ல வாழ்க்கை, புகழ் , கல்வி , அனைத்திலும் நீங்கள் கோடிஸ்வரனாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

      Delete
  10. Adw friends today nam vetri peruvom... thadai neengum my advance congrats to all...

    ReplyDelete
  11. thank u for akilan ,vijaykumar ,muniyappan. please update court case details

    ReplyDelete
  12. nanbargale en profile picture i anaivarum zoom seithu paarkaum , ungal manathil santhosathudan koodioya siru punnagai varum

    ReplyDelete
  13. மிகவும் மகிழ்ச்சி ராஜன் சகோதர

    நான் மிகவும் மதிக்கும் கல்விக் கடவுள் மட்டைப் பந்து விளையாடு வது போல் இருக்கிறார்

    தமிழகத்தையும் இந்தியாவையும் தனது ஒப்பற்ற அன்பினாலும் , செயலினாலும் , ஆண்ட பெருந் 'தலை்'வர் அய்யா காமராஜர்

    அவரது பெயரது வாய் விட்ட கூறுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும்

    ReplyDelete
  14. இன்று தடையாணை நீக்கப்பட்டு நமது வாழ்வில் நலம் காண எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் .

    ReplyDelete
  15. case nilavaram enna? Mr.akilan sir

    ReplyDelete
  16. Cause details update pannunga sir....???

    ReplyDelete
  17. நண்பர்களே மதியம் வரை பொறுமையாக இருங்கள்

    வழக்கு விசாரணைக்கு வருவது (AFTER SESSION ) மதியத்திற்கு மேல் தான்

    இதை கூறியது மதுரையில் நீதிமன்ற வளாகத்திலுள் Court No : 12 காலையிலிருந்து இருக்கும் நமது நண்பர்

    மேலும் இதை நமது வழக்கறிஞரும் உறுதி படுத்தியுள்ளார்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Thank you brother...my advance congrats to all sg adw selected teachers.

      Delete
  18. வாழ்த்துகள்! நண்பர்களே!!

    ReplyDelete
  19. nalla ullangal valum varai ellam nallathe nadakkum viravil nam aasiriyaravom nambikaiyudan irungal valga! valamudan!

    ReplyDelete
  20. ellam nalapadiyaga mudiya iraivanai vendovom

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

    அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

    இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. காரணமில்லாமல் இவ்வுலகில் அணுவும் அசைவதில்லை

      எல்லாம் நன்மைக்கே

      சில உண்மைகளை புரிந்து கொள்ள காலதாமதம் ஆகும் நான் உணர்ந்து விட்டேன் இறைவன் உங்களுக்கும் உணர வைப்பான்

      ஆனால் ஒன்று மட்டும் உறுதி முடிவு நம்முடையதுதான்

      1963_ ல் இருந்து இனிமேலும் நலத்துறை பள்ளிகளில் தற்போதய நிலை தொடர வேண்டும்
      எனில் சிறிது காலதாமதம் ஆனால்தான் அது நடக்கும்

      இதன் காரணம் என் நண்பர்கள் பலருக்கு தெரிவித்து விட்டேன்

      Delete
  22. ஒரு வேலை என்றால் இரவு பகல் பாராமல் உழைத்து வெற்றி அடையலாம்.
    கற்பித்தலில் அவ்வாறு செய்ய முடியுமா.
    மாணவர்களின் ஏற்புத் திறனை அதிகப் படுத்த என்ன புதிதாக செய்திருக்கீங்க.
    இப்படி எல்லாம் போனால் ஆளைண்டுக்கு இரு பள்ளி நடத்தினால் போதுமே.
    தனியார் பள்ளிகளை பின்பற்றி கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே டாப் மாணவர்கள் ஒரு வகுப்பிலும் சுமார் மாணவர்கள் இன்னொரு வகுப்பிலும் தோல்வி யடையக்ககூடிய மாணவர்கள் இன்னொரு வகுப்பிலும் பிரித்து தோல்வியடையச் கூடிய மாணவர்களுக்கு அணைத்து ஆசிரியர்களையும் வகுப்பு எடுக்க வைத்து கண்காணிக்கலாம் ஏ.
    ஒழுங்காக வராத மாணவர்களை எப்படி வர வைப்பது என்று உயர் மட்ட அளவில் யோசியுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி