சிறப்பு விமானத்தில் பறந்து வந்த இரண்டரை வயது இந்திய குழந்தை இதயம்: ரஷ்ய குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

சிறப்பு விமானத்தில் பறந்து வந்த இரண்டரை வயது இந்திய குழந்தை இதயம்: ரஷ்ய குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தம்

பெங்களூரில் இருந்து, இரண்டரை வயது குழந்தையின் இதயம், சென்னைக்கு சிறப்பு விமானத்தில் பறந்து வந்தது. விமான நிலையத்தில் இருந்து, 13 நிமிடத்தில், அடையாறு மருத்துவமனை சென்ற இதயம், இரண்டு வயது ரஷ்ய குழந்தைக்கு, வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த, இரண்டரை வயது சிறுவன், மூளை பாதிப்பு காரணமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல், மூளைச்சாவு நிலையை அடைந்தான். அவனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக, பெற்றோர் அறிவித்தனர். இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில், யாரும் கோராத நிலையில், சென்னை அடையாறு மலர் மருத்துவமனை, இதயத்தை கோரியது. இதையடுத்து, பெங்களூரு மருத்துவமனையில் அகற்றப்பட்ட இதயம், அங்கிருந்து, ஆறு பேர் மட்டுமே பயணம் செய்யும் சிறப்பு விமானத்தில், 1:10 மணி நேரம் பறந்து, நேற்று மதியம் 2:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சிக்கல் இல்லாத வகையில், ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து, பிரத்யேக ஆம்புலன்ஸ் உதவியுடன், 13 நிமிடங்களில், இதயம், அடையாறு மருத்துவமனையை சென்றடைந்தது. அங்கு, இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, ஒன்பது மாதங்களாக காத்திருந்த, ரஷ்யாவைச் சேர்ந்த, இரண்டு வயது குழந்தைக்கு, இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 'இதுபோன்று, சிறு வயது குழந்தையின் இதயத்தை தானம் பெற்று, சிறு வயது குழந்தைக்கு பொருத்துவது, இந்தியாவில் இதுவே முதல் முறை' என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளைச்சாவுக்கு பிந்தைய உடல் உறுப்புகள் தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களும், உடல் உறுப்பு தானத்திற்கான பிரத்யேக மையங்கள் துவங்கப்பட்ட, ஒருங்கிணைப்பு உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்தும், உடல் உறுப்பு தானம் பெற முடிகிறது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி