திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும்

 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்கூட்டம்  இன்று சென்னையில் நடைபெற்றதுகூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
** தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமான ரூ.5200/- ரூ.9300/-ஆக மாற்றி தர வேண்டும். தர ஊதியம் ரூ.2800/- ரூ.4200/-ஆக மாற்றி தர வேண்டும்.

**பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.


** ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்துடன் 50% அகவிலைப்படியை சேர்த்து வழங்குதல் வேண்டும்.

**வகுப்பறையில் ஆசிரியர்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வகுப்பறை வன்முறை களமாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

** ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (TPF) ஏற்படும் ஊழல்களையும், குழப்பங்களையும் நீக்கும் வகையில் தணிக்கை செய்து மத்திய கணக்காயத்திற்கு (GPF) மாற்றப்பட வேண்டும்

** நகராட்சியிலிருந்து ஊராட்சிக்கும், ஊராட்சியிலிருந்து நகராட்சிக்கு பள்ளிகளுக்கு மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் இரண்டு விதமான கணக்குகள் நடைமுறைகளை மாற்றி தற்பொழுது பணிபுரிகின்ற பணி நிலையில் வருங்கால வைப்பு நிதியையும், கணக்கினையும் முறைப்படுத்தி அதே பள்ளியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அமசக் கோரிக்கைகள் தமிழக அரசு நிறைவேற்றக் கோரி மாநில பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி