முக்கியசெய்தி- மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

முக்கியசெய்தி- மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு

பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியை ரூ.75 ஆயிரமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாயின்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கிற வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உரிய கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. 75000 vachu enna panna mutiyum antha kulanthangalin kalvi saelavu muluvathayum arasae atrugolla vaendum entha panathaie tharkaliga uthavipanamaga kututhu arasu antha kulanthaigu vaalvil munnaera valikatta vaendum....

    ReplyDelete
    Replies
    1. அப்படியே பள்ளி மாணவனிடம் அடி வாங்கி கிழிந்த காது சவ்வு சரி செய்யவும் , பள்ளி மாணவனால் கத்தி குத்து பட்டு சாகும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது மிச்ச மீதம் இருந்தா கொஞ்சம் போடுங்க அம்மா தாயேஏஏஏஏஏஏ

      Delete
  2. நண்பர்களே,,,,,,,சற்று சிந்தியுங்கள்,,,,,,,,, இன்றும் எங்கள் கல்வி மறுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையே,,,,,,
    காரணம்,,,,,,, 669 இடைநிலை ஆசிரியர் கலிப்பணியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என்றால்,,,,,,,,,,, அதற்குரிய மாணவர்களின் கல்வி நிலை என்ன,,,,,,,,,,,,,
    அவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்,,,,,,,,,,,,,
    அவர்கள் எவ்வாறு அனைத்து சமுதாயத்தினருடனும் சமநிலையில் போட்டி போட முடியும் ,,,,,,,,,,,,,,,,,, நன்றாக சிந்தியுங்கள் இங்கு அடிப்படைகல்வியே வளர்க்கப்படும் சூழல் சரியாக அமைக்கப்படவில்லை என்பது உண்மை தானே,,,,,,,,,,,,,,,, அப்படியென்றால், இங்கு எங்கள் சமுதாயத்திற்கு இன்று வரை கல்வி மறுகப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை தானே,,,,,,,,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி