தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை
முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட சுற்றறிக்கை:
கடந்த ஜூலையில் 110 விதியின் கீழ் 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி
அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை
ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை, பணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்:

மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டி பள்ளி,

திண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளி, நத்தம்
புரளிபுத்தூர் பள்ளி,

தேனி போடி நாயக்கனூர்
ராசிங்கபுரம் பள்ளி,

ராமநாதபுரம் திருவாடானை
ரெகுநாதபுரம் பள்ளி,

சிவகங்கை முடிகண்டம்
பள்ளி,

விருதுநகர் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி
பள்ளி, சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளி,
வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் பள்ளி
ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. பணிநிரவல் டிரான்ஸ்பர் செய்திகளை அறிய kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி