பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!கேப்டவுன்: பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன.

அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை தோற்கடித்து இந்திய அணி இறுதிக்கு சென்றது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 389 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 392 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி