அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் கணினி கணக்காளர் பணிக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் கணினி கணக்காளர் பணிக்கு வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த தொகுப்பூதிய கணக்காளர் பணியிடத்திற்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதன் அடிப்படையில் பி.காம் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணிப்பொறியில் டாலி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணி முற்றிலும் தாற்காலிகமானது என்பதால் மாதந்தோறும் ரூ.7500 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணியிடத்திற்கு ஆர்வமுள்ளோர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம், விருதுநகர் மாவட்டம் என்கிற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகிற 19-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

4 comments:

  1. இந்திய விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைக் கற்றுக்கொடுக்க, சர் ஆல்பர்ட் ஹோவர்ட் என்கிற வேளாண் விஞ்ஞானியை அனுப்பிவைத்தது அப்போதைய ஆங்கிலேய அரசு. 15 வருடங்கள் இந்தியாவின் ஈடு இணையற்ற விவசாயப் பாரம்பரிய அறிவியலைப் பார்த்துவிட்டு, 'இங்கே நான் கற்பிக்க ஒன்றும் இல்லை. கற்றுக்கொண்டதுதான் ஏராளம். உண்மையில் மேலை நாடுகள் இவர்கள் அறிவைத் தேடிக் கற்க வேண்டும்’ என்று தான் எழுதிய 'AN AGRICULTURAL TESTAMENT’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். காய்ப்பு உவப்பு இல்லாத அவரது ஆய்வும், தேடலும், அகங்காரம் இல்லாத மனமும்தான் அப்படி எழுத வைத்தன.
    ஆறாம் திணை
    ஆனந்த விகடன்

    ReplyDelete
    Replies
    1. sri sir 50 schl tharam uyarthenanga high schl a athula yerpata 250 BT vacant TET pass panavangala kondu nirapamatangala?

      Delete
    2. நண்பரே இனி பணிநியமனம் என்று ஒன்று நடைபெற்றால் அது tet யில் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டு மட்டுமே.. அதனால் கவலை வேண்டாம்..

      Delete
  2. SRI SIR,MANI SIR,SURULI SIR,VIJAYAKUMAR CHENNAI do u know about sec grade salary related TATA case details( g.p 4200)?PLS SHARE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி