தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது.தற்போது அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்து விட்ட பின்பும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை.எனவே, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், தொகுப்பூதிய, மதிப்பூதிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்.

வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பணி நியமனங்கள், பதவி உயர்வுகள், பணியிட மாறுதல்களில் போது முறைகேடுகளை இடமளிக்காமல், அதற்கென உள்ள அரசாணைகளின்படி நடவடிக்கைகளை சரியாக அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 22ல் ஓட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி