Dec 3, 2014
Home
kalviseithi
உயர்கல்வி உதவித்தொகைகளை உயர்த்திய மத்திய அரசு!
உயர்கல்வி உதவித்தொகைகளை உயர்த்திய மத்திய அரசு!
புதுடில்லி:
ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, உதவித்தொகைகளுக்கான அடிப்படை நிதியளவை, பல்கலைக்கழக மானியக்குழு அதிகரித்துள்ளது.
இதன்படி,
JRF எனப்படும் Junior
Research Fellowship திட்டத்தின்கீழ்
வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, ரூ.16 ஆயிரத்திலிருந்து, ரூ.25
ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல்,
SRF எனப்படும் Senior
Research Fellowship என்ற திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையின் அளவு ரூ.18 ஆயிரத்திலிருந்து,
ரூ.28 ஆயிரம் என்ற அளவிற்கு
உயர்ந்துள்ளது
இதுகுறித்து
ராஜ்யசாபாவில் பேசிய மத்திய மனிதவள
அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அடிப்படை அறிவியல் துறைகளில், JRF மற்றும் SRF ஆகியவற்றில் உயர்த்தப்பட்டுள்ள தொகையானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில்
வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகரானதாக இருக்கும்" என்றார்.
மானுடவியல்
மற்றும் சமூக அறிவியல் துறையில்,
உதவித்தொகைகளின் உயர்வு, 55% என்பதாக இருக்கலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்கான சுவாமி
விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தை
பெல்லோஷிப் திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை, முதல் 2 ஆண்டுகளுக்கு, மாதம்
ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 என்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரத்திலிருந்து,
ரூ.15,500 என்பதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்,
GATE தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையும் ரூ.8
ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDelete5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர் நீதிமன்றம் அதற்கான அரசானை GO 25 ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் ரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
சேர்ந்துள்ளோம். அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணிநியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானை ரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசானை ரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சாண்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம்.
நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம்.
இப்படிக்ககு
K.ரஞ்சித்குமார்
பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர்
John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்
மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்
என்று முடியும் இந்த adw list ன் தொடர்கதை .
Delete