ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி


மாணவர்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்க்கும் அரசுஆணைகளை நீக்க வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அரையாண்டு தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, உடன் படிக்கும் சக மாணவிகள் மீது பாலியல் வன்முறை, சக மாணவர்கள் மீது வன்முறை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.இதனால், ஆசிரியர்கள் அல்லாத சமூக ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நேற்று நடந்த அரையாண்டுத் தேர்வுப் பணிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர். பள்ளி நேரம் முடிந்தபின் மாலை அந்தந்தப் பள்ளி வளாகங்களில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டத்தில் 2500 ஆசிரியர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கழகம் சார்பில் அந்தந்த பள்ளி முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சூசை அந்தோணிராஜ், செயலாளர் முருகன், நிர்வாகி செல்வேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி