அமெரிக்க பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாளாக அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

அமெரிக்க பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாளாக அறிவிப்பு

டிரென்டன்: அமெரிக்கா, நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரென்டன் நகரில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண கல்வி வாரிய மாதாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவர்த்தன் பூஜை, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கணேச சதுர்த்தி, நவராத்திரி ( 9 நாட்கள்), தசரா, தீபாவளி, மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி, ஹோலி, யுகாதி, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, ஆகிய நாட்கள் மத ரீதியிலான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.


நியூஜெர்சி மாகாண மாவட்ட கல்வி வாரியத்தின் இந்த முடிவுக்காக வாரியத் தலைவர் மார்க் டபிள்யூ. பீட்ரனுக்கு பிரபஞ்ச ஹிந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குரு பூர்ணிமா, நாக பஞ்மி, மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் விடுமுறை அறிவிக்க கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

1 comment:

  1. கோவையில் பள்ளி மாணவர்கள் ரகளை: சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் பதிவு செய்த நாள் - டிசம்பர் 11, 2014, 12:31:38 PM மாற்றம் செய்த நாள் - டிசம்பர் 11, 2014, 12:31:38 PM
    கோவை மாவட்டம் சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி