" 2016ல் நிலவுக்கு சந்திராயன் 2 விண்கலத்துடன் 'ரோபோ' கார் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது” என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மங்கள்யான் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்பார்த்த சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. செவ்வாய் கோளில் தற்போது தூசி புயல் வீசும் பருவம் துவங்கியுள்ளது. இந்த புயல் எவ்வாறு பரவுகிறது என்பதை மங்கள்யான் ஆய்வு செய்கிறது. அதில் உள்ள அறிவியல் கருவிகளும் படிப்படியாக செயல்பட துவங்கி வருகின்றன. முதற்கட்டமாக மீத்தேன் சென்சார் செயல்பட துவங்கியுள்ளது. இதன்மூலம் மீத்தேன் எவ்வாறு உருவாகிறது. உயிரினம் மூலம் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்கிறது. மங்கள்யான் 6 மாதங்கள் சுற்றிவரும். அதன்பின் ஆய்வு முடிவுகள் தொகுத்து வெளியிடப்படும். சந்திராயன் 2 விண்கலம் 2016 ல் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதனுடன் செல்லும்'ரோபா' கார் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும். ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா 'ரோபோ' கார் மூலம் ஆய்வு செய்துள்ளன. 'ரோபோ' கார் மூலம் தேவையான தகவல்களை பெற முடியும் என்பதால் நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் இல்லை. வீரர்களை அனுப்புவதால் பெரிய அளவில் பயன் இல்லாததால் போலி கவுரவத்தை 'இஸ்ரோ' விரும்பாது. ஆனால் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பும் திட்டம் உள்ளது. இதன்மூலம் சர்வதேச விண்வெளி திட்டத்தில் இந்தியாவும் இணைய முடியும்,' என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி