புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்


தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின்வாரியத் தலைவராக பதவி வகிக்கும் கே ஞானதேசிகன்புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக கே ஞானதேசிகன் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆணையராகவும் ஞானதேசிகன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழக அரசின் ஐஏஎஸ் பயிற்சி மையமான அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஞானதேசிகன், தமிழ்நாடு மின்வாரியம், மற்றும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகஇருக்கிறார். பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலரான சாய்குமார், தமிழ்நாடு மின்வாரியம், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஐஏஎஸ் அகாதமிக்கு இயக்குநராக உள்ள இறையன்பு, பொருளாதாரம், புள்ளியியல் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த்துறை முதன்மைச் செயலராக உள்ள ககன்தீப்சிங் பேடி, ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சித்துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

9 comments:

  1. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete
  2. ஆசிரியர் சொந்தங்களே ஒரு முக்கிய செய்தி... வெய்ட்டேஜ் தொடர்பான,ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பான உங்கள் கோரிக்கையை எங்களிடம் தெரிவிக்கவும்...


    ஆசிரியர் சொந்தங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.....

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஒ.பன்ணீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு தருவதாக முதல்வரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார் ஆகவே இன்று இரவுக்குள் நாங்கள் மாதிரி கோரிக்கை மனுவினை பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டி உள்ளது...

    ஆகவே போராட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏதேனும் கோரிக்கை தெரிவிப்பதாக இருந்தால் இன்று மாலை உடனடியாக தொலைபேசி மூலமாகவோ மெயிலுக்கு எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...

    இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக்,மற்றும் அனைத்து கல்வி வலைதளங்களிலும் ப் தயவுசெய்து பகிரவும்

    இப்படிக்கு
    செல்லத்துரை மாநிலதலைவர், 98436 33012
    கபிலன் மாநில செயலாளர், 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி மாநில பொருளாளர் 95430 79848

    E.mail- rajalingam.rp@gmail.com

    ReplyDelete
  3. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,,எல்லாம் மாயை தானா,,,,,,,செயல்பாட்டில் இல்லையா,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete
  4. Jenitha jeni pls entet ur wtge mark pa.

    ReplyDelete
  5. Jenitha jeni pls entet ur wtge mark pa.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி