10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2015

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு


10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாகதமிழகத்தில்உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்குபுரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் இந்த ஆய்வு நடத்தும் பொறுப்புஅரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வுக்கான மாதிரி கேள்வித்தாள்களை தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்றல் அடைவுத் திறன்ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு நடத்தப்படுகிறது.இந்த ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல், கற்பித்தல் முறைகளில் தேவைப்பட்டால் மாறுதல்களைக் கொண்டுவரவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

4 comments:

 1. Error spotting la 'than' வந்தால் to போடு. Are vandha is were vandha was along vandha into a vandha an podu est vandha the podu.....
  Kandrave..... English a ipdi sonnadhan avangalukku puriyidhu sir.... language oda taste a puriyavaikka try panninom 35 marks edukka vaikka mudiyadhu.... 6 th dhane alachiyama vittuttu 10 th la vandhu padi padina epdi padipanga. From 6 th to 9 th they are not getting any exercise and experience that sharpen their mind...... how can they perform well all of a sudden.... I cant realize myself as an English teacher.... no job satisfaction here.... only our bank account filled not our mind....

  ReplyDelete
 2. Any person who appointed in tirupur muncipality at the time of 1999 as teacher please contact me(geetha priyadharshini)9789215759 very urgent

  ReplyDelete
 3. CCE method is only solution for this...so many lesson he can read...marknu siriya vattathukul adaichuram..paadasumai kuraiyum...tension students Ku kuraiyum..analysis mind increase aagum..

  ReplyDelete
 4. Ya... surely .... its right arivu sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி