அரசு மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைநியமிப்பதற்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது. அதில் 2 லட்சத்து 2,000 பேர் எழுதுகின்றனர்.அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,868 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு இன்று நடக்கிறது.
தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 2,000 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்தவாரம் வெளியிடப்பட்டது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது தயாரித்து வழங்கும் விடைத்தாள் களை போலஆசிரியர் தேர்வு வாரியமும் விடைத்தாள்களை தயாரித்துள் ளது.
அதில் தேர்வு எழுதும் பட்டதாரிகளின் போட்டோ மற்றும் அவர்கள் எழுத உள்ள தேர்வு, தேர்வு எண் ஆகியவை இடம்பெற்று இருக்கும். தேர்வு எழுத வரும் பட்டதாரிகள் விடைத் தாளின் முதல் பக்கத்தில் தங்கள் கையெழுத்தை மட்டும் போட்டால் போதும். அந்தவகையில் ஓஎம்ஆர் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.அச்சிடப்பட்ட விடைத்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் டிசம்பர் இறுதி வாரத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் 34 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு நடத்துவதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாகவும், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அனைவரும் 32 மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தரைத்தளத்தில் அமர்ந்து எழுதவசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றோருக்காக சொல்வதை எழுதுவோர் அமர்த்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி