குரூப்–1 முதன்மை தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

குரூப்–1 முதன்மை தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி.


2013–14–ம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துதேர்வை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் நடத்தியது. தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
எழுத்து தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 12–ந்தேதி வரை நடை பெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் (பொறுப்பு) வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும்.

மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். உதவி வேலை வாய்ப்பு அதிகாரிகள் 447 பணி இடங்கள் நிரப்புவதற்கான தேர்வு ஏப்ரல் 18–ந்தேதி நடைபெறும்.மேலும் இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30–ந்தேதிவெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி