பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.
கடந்த ஆண்டு 2,242 மையங்களில் 8.79 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.புதிய தேர்வு மையங்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் நீண்ட தூரம் பயணிப்பதைக் குறைக்கும் வகையிலும் புதிய தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் 600 மாணவர்களுக்கும் அதிகமாக தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக தேர்வு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 மாணவர்கள் என்ற அளவில் இருந்தால் தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும். வினாத்தாள் கட்டுகள், விடைத்தாள் கட்டுகளை விநியோகிக்கவும், தேர்வறைகளைக் கண்காணிக்கவும் இந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் எளிதாக இருக்கும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான பணிகள் நிறைவு: விடைத்தாள் முகப்புப் பக்கங்கள் அச்சிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.வரும் வாரங்களில் விடைத்தாள்கள், வினாத்தாள்கள் அச்சிடும் பணிகளும் தொடங்கும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி