200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2015

200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் என். செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசாணை எண்.260-இல் குறிப்பிட்டுள்ளபடி, 200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்ற பட்டதாரி மாணவர்களைப் பணியமர்த்த வேண்டும்.சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் 550 பார்வையற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்', மாநில அளவிலான தகுதித் தேர்வு "செட்' தேர்வுகளில் தகுதிபெற்ற 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும்.படித்து முடித்து வேலையில்லாத பார்வையற்ற மாணவர்களுக்கான உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இதுதொடர்பாக நீதிமன்றம்தலையிட்டும், எங்களுடைய கோரிக்கைகள் இன்று வரை ஏற்கப்படவில்லை.எனவே, இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்துபேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், மீண்டும் மார்ச் மாதத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

6 comments:

  1. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும், எனது நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. “கால் காசுன்னாலும் அது கவர்மென்ட் காசா இருந்தா தனி கௌரவம்தான்’’ என அரசு வேலையைச் சிலாகித்துப் பேசுவார்கள் கிராமத்துப் பெரியவர்கள். அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அப்படி. அதற்காகவே கஷ்டப்பட்டு படித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டிவிட்டது. ஆனால், இவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது அந்த தீர்ப்பு.“வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10(ஏ) செல்லாது’’ -இப்படியொரு அதிரடி தீர்ப்பை கடந்த மாதம் ஒரு வழக்கில் வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போர் கலக்கம் அடைந்துள்ளனர்.இனி, அரசு வேலை கிடைக்காதோ என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, ஆசிரியர் பணிக்கு சீனியர்களால் போகமுடியாத நிலை இருந்து வருகிறது. இப்போது, மற்ற துறையினரும் பாதிக்கப்படும் நிலைஏற்பட்டுள்ளது. “சீனியாரிட்டிப்படி பணி நியமனம் இல்லைன்னா தமிழ்நாட்டுல குறைஞ்சது 10 லட்சம் பேராவது பாதிக்கப்படுவாங்க...’’ என வருத்தம் பொங்க பேசுகிறார் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட்.“தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் பணி நியமனத்தில் வெவ்வேறு அணுகுமுறையை கையாள்கின்றன. ஒரு அரசு சீனியாரிட்டிப்படி ஆட்களை எடுக்கும். இன்னொரு அரசு, மெரிட்தான் முக்கியம் என்று சொல்லும். இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். ஆசிரியர் தகுதித் தேர்வு வருவதற்கு முன்பு சீனியாரிட்டிப்படி எடுத்தார்கள். இப்போது சீனியாரிட்டி பார்ப்பதில்லை. அதற்கு வெயிட்டேஜ் மார்க்கும் தருவதில்லை.சரி, ‘டெட்’ தேர்வில் பாஸாகி வெயிட்டிங்கில் இருப்பவர்களுக்கு வெயிட்டேஜ் கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால், அதற்குள் இப்படியொருதீர்ப்பு வந்துள்ளது. இதனால், 3லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என வேதனையோடு தெரிவித்தவர், வேறு துறையில் பணிக்காக காத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.“இப்போது மற்ற துறைகளில் பலரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அரசு வேலைகளில் 70 சதவீத வேலைவாய்ப்புகள் சீனியாரிட்டி முறையில்தான் நிரப்பப்படுகின்றன. பஸ் டிரைவர், கண்டக்டர், மருந்தாளுனர், மின்சார வாரியப் பணி,சத்துணவு அமைப்பாளர்என நிறைய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்பப்படுகின்றன. இப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.இப்படி பதிவு மூப்பில் காத்திருக்கின்ற பலரும் அடித்தட்டு மக்கள்தான். அதனால், அரசு இந்தப் பிரச்னைக்கு உடனே ஒரு தீர்வு காண வேண்டும். தேர்வு எழுதியவர்களுக்கு 50சதவீதமும் சீனியாரிட்டி அடிப்படையில 50 சதவீதமும் என வேலைவாய்ப்பை கொண்டுவந்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருப்பவர்கள் கனவை கலைத்துவிடக்கூடாது’’ என்கிறார், வேதனையோடு!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே நமது சென்னை உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது எனது நெஞ்சார்ந்த நன்றியை முதலில் இவ்வெற்றிக்கு காரணமான கல்வி செய்திக்கும் , கலந்து கொண்ட அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் மற்றும் தோழர் ஜெகநாதன் , சகோதரர் சுருளிவேல் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    மேலும் நமது போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை தலைவர் தொல் . திருமாவளவன் அவர்களுக்கும் மார்ச்சிஸ்ட் தோழர் ஆறுமுக நாயினர் அவர்களுக்கும் , செல்வ பெருந்தகை அவர்களுக்கும்
    மாநில sc / st அரசு ஊழியர் கூட்டமைப்பு அனைவருக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சங்க தலைவர் பெருஞ்சித்திரனார் அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றி

    நமது உண்ணாவிரத போராட்டத்தின் இயக்குநர் ஹரிகிஷ்ணன் சகோதரருக்கு அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றி

    ReplyDelete
  4. வழக்கு நேற்று 31.01.15 வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது AAG ஆஜர் ஆகி வழக்கை 09.02.15 அன்று ADVOCATE GENERAL ஆஜர் ஆவார் என்று நீதிபதியிடம் கூறி அந்த தேதி வாங்கிய தnக நமது வழக்கறிஞர் கூறியுள்ளார்

    நன்றி
    நன்றி

    ReplyDelete
  5. Akilan sir pg welfare pati solunga sir

    ReplyDelete
  6. நம் எதிர்பார்ப்பு 9ஆம் தேதியாவது நமக்கு விடிவுகாலம் பிறக்குமா அகிலன் சார் பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது இம்முறையாவது........? ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி