பிப்ரவரி 26-ல் ரயில்வே பட்ஜெட்; 28-ல் பொது பட்ஜெட் தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

பிப்ரவரி 26-ல் ரயில்வே பட்ஜெட்; 28-ல் பொது பட்ஜெட் தாக்கல்


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 27-ல் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 28-ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறையின் அமைச்சரவை குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. கூட்டத்தின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு பகுதிகளாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 23-ல் தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி ஒரு மாத இடைவேளைக்குப் பின்னர் ஏப்ரல் 20-ல் தொடங்கி மே 8 வரையிலும் நடைபெறும்.

இந்த இடைப்பட்ட காலமானது நாடாளுமன்ற குழுக்கள் பட்ஜெட் குறித்து ஆய்வு செய்ய பயன்படுத்திக் கொள்ளப்படும்.பிப்ரவரி 23-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மறுநாள் 24-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.பிப்ரவரி 26 வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி 28 சனிக்கிழமையன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சனிக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறும்போது, "இதற்கு முன்பும் சனிக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.அவசரச் சட்டங்களுக்கு முக்கியத்துவம்:பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலக்கரிச் சுரங்கங்கள், இ-ரிக்‌ஷா, குடியுரிமைச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல் தொடர்பான அவசரச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.அவசரச் சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசு முனைப்புடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சித்து வரும் நிலையில், இதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்டு காட்டுவேன் என அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி