குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2015

குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம்ஆண்டுகளுக்கான குரூப்-2 ஏ அடங்கிய நேர்முக தேர்வு அல்லாத பதவிகளான உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்று அனைத்து பிரிவுகளை சார்ந்த 2 ஆயிரத்து 508 காலிப்பணியிடங்களுக்கு முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு கடந்த டிசம்பர் 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் இப்பதவிக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு மீதமுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இனவாரியாகவும், துறை வாரியாகவும் தேர்வாணைய இணையதளத்தில் அன்றே வெளியிடப்படுகின்றது.

எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை ஆராய்ந்து உறுதிசெய்து, அவரவர் பிரிவில் காலிப்பணியிடங்கள் இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நாளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அட்மின் சார் இதபத்தி கொஞ்சம் Explain பன்னுங்க. ேன்னா இந்த Exam ல நான் 131 கேள்விக்கு Answer பன்னியிருந்தேன். இப்ப இவங்க என்ன சொல்றாங்கன்னு புரியல. Please sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி