31 பேராசிரியர்களின் பணி நியமனத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ரத்து செய்தது சட்டப்படி தவறு : ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

31 பேராசிரியர்களின் பணி நியமனத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ரத்து செய்தது சட்டப்படி தவறு : ஐகோர்ட்டு உத்தரவு


விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 31 பேராசிரியர்களின்நியமனத்தை ரத்து செய்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவைசென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

பேராசிரியர்கள் நியமனம்

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 63 பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் செய்தது. இதன்படி, நடந்த தேர்வில் 33 பேர் தேர்வு செய்யப்பட்டார் கள். இவர்களது தேர்வுக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அவர்கள் அனை வருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அதில், 2 பேரை தவிர 31 பேர் பணியில் சேர்ந்தனர்.

நியமனம் ரத்து

இந்த நிலையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதுகுறித்து விசாரிக்க ‘கேப்டன்’ மோகன் குழுவை கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு நியமித்தது.இந்த குழு விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் பதவிக்கு 31 பேரை நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்து, கடல்சார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டப்படி தவறு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-பேராசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரிய தகுதியை கொண்டுள்ளார்கள். அவர்களது தேர்வினை பல்கலைக்கழகத்தின் தேர்வு குழுவும், நிர்வாக கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களது தேர்வு, முறையாக நடந்துள்ளது.அப்படி இருக்கும்போது, கேப்டன் மோகன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், இவர்களது நியமனத்தை ரத்து செய்தது சட்டப்படி தவறாகும். எனவே, பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன்.

பலன்கள்

அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தார்களோ, அன்று முதல் அவர்களது பணியை வரன்முறை செய்து, அவர்களுக்கு வழங்கவேண்டிய பண பலன்கள், பதவி உயர்வு உள்ளிட்டவைகளை முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி