அரசு மற்றும் தனியார் துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

அரசு மற்றும் தனியார் துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டதனித்தாசில்தார் மூலம் வழங்கப்பட்டு வந்த மாத உ தவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும்,தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பும், முழு ஊதியமும் வழங்க வேண்டும், பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை, கழிப்பறை வசதி செய்துதர வேண்டும், நகராட்சிகளின் கடைகளில் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகமது ஷெரீப், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் செல்வகுமார், சையது முஸ்தபா, ஸ்டெல்லாமேரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை சிறப்பு தலைவர் திருமார்பன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். நிஜாமுதீன், வெண்புறாகுமார், பழனிவேல், அமர்ராஜ் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்புப்பிரிவு மாநில செயலாளர் திருமாறன் முடித்து வைத்தார். முடிவில் வக்கீல் புவனேசுவரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி