ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2015

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி


'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில்,1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 comments:

  1. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய அனைவருக்கும் அரசு பணி கிடைக்க வழி உள்ளதா?இல்லையா?
    இன்றைய காலகட்டத்தில் நடந்த மிகபெரிய அவலம் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு..அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஒவ்வொரு சாமானிய குடிமகனின் இலட்சியத்தை குழி தோண்டி புதைத்து விட்டு இன்று நாங்கள் தன சிறந்த ஆசிரியர் தேர்வு முறையை அறிமுகம் செய்தோம் என்று மார்தட்டி கொள்கிறார்கள்.ஆசிரியர் தகுதி தேர்வு முறை மூலம் தேர்வு செய்யும் நோக்கத்தை நங்கள் எதிர்க்கவில்லை...


    ஆனால் அவர்கள் அறிமுகம் செய்த weightage முறையை தான் வன்மையாக கண்டிக்கிறோம்,எதிர்கால ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி...


    அரசால் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய போது அரசின் கொள்கை முடிவில் நீதி மன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறியது நம் நாட்டில் நீதி எவ்வளவு விழிப்புடன் உள்ளது என்பதை காட்டுகிறது.விருப்பு,வெறுப்பு இல்லாமல் செயல்படுவேன் என்ற உறுதி மொழியை எந்த சட்ட புத்தகத்தில் தேடி நீதிபதியிடம் ஒப்படைக்க என தேடி வருகின்றேன்.

    அரசின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுதிவிட்டு பின் அரசை எதிர்த்து வழக்கு தொடுப்பது சரியல்ல என கூறிய நீதிமன்றம்,90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தகுதி என்ற விதியை கூறி விட்டு பின்னர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதிப்பெண்ணை 82 ஆக குறைத்து வழங்கி விதியை மீறியபோது நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தபோது, தயங்காமல் கூறுகிறேன் "நீதிமன்றத்தின் உண்மை தன்மையை சற்றே யோசித்து பார்க்க வேண்டிய நிலைக்கு தான் நாம் தள்ள பட்டோம்" என்பதே உண்மை.


    ஆனாலும் உயர்நீதி மன்றம் செய்த தவறை நீதிக்கு பெயர் போன மதுரை கிளை சற்றும் பாரபட்சம் இன்றி ரத்து செய்த போது இன்னும் தமிழகத்தில் நீதி சாகவில்லை என உணர வைத்து நம்மை..

    நம் மக்கள் நல அரசு ஆசிரிய வர்க்கத்துக்கு செய்த தவறை சரி செய்ய இப்போதும் வாய்ப்பு உள்ளது..காயம் செய்த ஒவ்வொரு மனதிற்கும் அரசு பணி என்ற மருத்துவத்தை தந்து இந்த ஆசிரிய சமுதாயத்தை காப்பாற்ற வழிவகை உண்டு..

    இன்றும் நம் 2013 தேர்வில் வெற்றி பெற்ற 73000 பேருக்கும் ஒவ்வொரு அரசு பள்ளி வீதம் ஒரு ஆசிரியருக்கு பணி என்ற நிலையை கொண்டு வந்தால் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணிக்கு செல்வது உறுதி..

    தற்போது உள்ள நிலையில் ஒரு அரசு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுக்கிறார் என்றால் அவரின் வேலைகளை தற்போது நிரப்பும் ஆசிரியரை கொண்டு முடிக்கலாம்.அதே போல தற்போது பொதுமக்களுக்கும் அரசு பள்ளிக்கும் நிறைய இடைவெளி உள்ளது.பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்யலாம்.

    எல்லா அரசு பள்ளியிலும் அடிப்படை வசதியை மேம்படுத்த அரசின் உதவியை நாடாமல்,அரசை குறை கூறாமல் மக்களிடம் சிறு சிறு தொகையை பெற்று அரசு பள்ளியின் நிலையை தனியார் பள்ளிகளின் நிலையை விட சிறப்பாக மாற்ற முயற்சி செய்யலாம்..மாணவர்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் வந்து விட்டால் மாணவர்களின் எண்ணிக்கை கூடும்..இதனால் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு முடிவுக்கு வருவதுடன்,பற்றாக்குறை ஆசிரியர் கணக்கெடுப்பு தொடங்கும்..அனைத்து ஆசிரியர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கும்.

    அரசு பள்ளி மூடும் நிலை மறைந்து,தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் முடிவிற்கு வரும்.இன்றைய பெற்றோர்களின் கல்விகட்டன சுமையை இந்த அரசு இறக்கி வைத்து வாழ்த்து பாடும்.

    இந்த ஆண்டு மட்டும் அல்ல.இனி வரும்காலத்திலும் ஆசிரியர் தலைமுறையே உங்களை வாழ்த்தும்..

    ஆனால் ஒரு வேண்டுகோள்..நீங்கள் எடுக்கும் முடிவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இல்லாமல் பொது மக்களின் நலன் காக்க செய்யுங்கள்..


    தமிழகமே என்றும் உன் நினைவில் வாழ்ந்து வளம் பெரும்.

    இப்படிக்கு கார்த்திக் மோகன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யேசனை., நாடு முன்னேறும் ஆணால் அரசியல்வாதிக்கு பணம் அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க முடியாது, தலைவனாக இருக்க மற்றவர்களை இலவசம் கொடுத்து முட்டாள் ஆக்கவது என்ற கடமையோடு செயல்படுபவர்கள். ... நாமம் வாழ்க.

      Delete
  2. Trb arivithha 669 paniyidama illai athu poga meendum 616 puthu kaali paniyidama. Mothamey 616 paniyidamthana. Thelivaga sollungal tholarey..

    ReplyDelete
  3. Athu poga meetham ullathunu ninaikuren. Athu serthuns bt posting pottachu kaali paniyidam illaiyendru varavendume

    ReplyDelete
  4. enakum purila motham yethanai posting plz anyfrds rply

    ReplyDelete
  5. Any one know when will engg trb exam date announce the trb

    ReplyDelete
  6. Any one know when will engg trb exam date announce the trb

    ReplyDelete
  7. Munniyapan sir hw r u?.
    May be it's for 2014-15 vaccants sir.

    ReplyDelete
  8. Hi frnds ean kita back log vaccant list ela dist kum iruku . Over all ah 358 vaccant 2011 la irundu sg ku iruku so ithu kandipaa current yr vaccant only

    ReplyDelete
    Replies
    1. Back log vaccancy post for sg
      Nilgiris- 38
      Villupuram -67
      Kanichipuram-37
      Thiruvanna malai- 45plus
      Thiruvallur-30
      Kovai-05
      Salem-10
      Erode-21

      Delete
    2. Sir namakal and thiruvarur 0 vaccant. Thanjavur 20 vaccant sir

      Delete
    3. Sir ithu backlog vaccant tan curent vacancy details theryathu

      Delete
  9. Any news about pg welfare list ple share

    ReplyDelete
    Replies
    1. இந்த வார இறுதிவரை பொறுமையாக இருங்கள் திரு. பிரபா சகோதரரே கண்டிப்பாக இந்த வாரத்திற்குள் தேர்வு பட்டியல் வரவழைத்து விடலாம்

      நாளை உங்கள் பிரச்சனையும் அனைவருக்கும் தெரிய வைத்து விரைவில் பணி நியமனம் செய்ய வலியுறுத்துவோம்

      கட்டாயம் நல்லதே மிக விரைவில் நடக்கும்
      தன்னம்பிக்கையுடன் இருங்கள்

      Advance wishes

      Delete
    2. Nanbare 5% relaxation unda welfare 669 postingkku? ippo announce panna 616 posting veraya? pls reply nanba

      Delete
    3. வெற்றி நமதே சிவா

      Delete
  10. Sir aft noon soldren. Details in office room. Vera dist details venum ah

    ReplyDelete
  11. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மதிய வணக்கம்

    ReplyDelete
  12. நண்பர்களே வணக்கம் மேற்கண்ட செய்தி இன்றைய தினமலர் பதிப்பில் வந்துள்ள செய்தி

    இந்த செய்தியில் உள்ள தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்று இருக்கிறார்கள்

    TRB 2013 ஆகஸ்ட் மாதம் அறிவித்த 669 பணியிடம் எப்படி அறிவித்தார்கள்

    முதலில் ஆதிதிராவிட நலத்துறையிடமிருந்து உங்கள் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் எத்தனை காலிப்பணியிடம் உள்ளது என காலிப்பணியிட பட்டியல் வாங்கி பின் நிதி ஒதுக்கி இந்த வருடம் 669 நியமித்து கொள்ளுங்கள் மீதி பணி யிடம் அடுத்த கல்வியாண்டில் நிரப்பலாம் என்று கூறிவிட்டு பின்புதான் தேர்வு வாரியம் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடம் SC/SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட னர்

    எனவே அவர்கள் அறிவித்தபடி பணிநியமனம் மிக விரைவில் நடைபெறும்

    புத்தகத்தில் உள்ளதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம் ஆனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது தான் சிறந்த ஆசிரியருக்கு உரிய
    சிறப்பு தகுதியாக நான் நினைப்பவை

    எனவே

    முதலில் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்
    நன்றி

    ReplyDelete
  13. Akilan Sir.... அட்வகேட் ஜெனரல் எப்போது ஆஜர் ஆவார்?

    ReplyDelete
  14. நாளைய ஆசிரியர்களே யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சுய அறிவை பயன்படுத்தி அதில் தன்னம்பிக்கையுடன் அந்த செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள் பின்பு முடிவுக்கு வாருங்கள்

    சுப்ரிம் கோர்ட் முடிவு வந்தால்தான் ADW & PIRAMILLAI KALLARA SCHOOL நியமனம் செய்வார்கள் என்று யாரவது உங்களிடம் சொன்னாலோ
    அல்லது ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது எனவே மதுரையில் நிலுவையில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்தாலும் பணி நியமனம் தாமதம் ஆகும் என்று சொன்னாலோ
    யோசிக்காமல் திருப்பி பதிலளியுங்கள் TRB ஏற்கனவே NOTIFICATION விட்டு விட்டதால் இனி பணி நியமனம் செய்ய இந்த இரண்டும் பெரிய விஷயம் கிடையாது எனவே மதுரையில் உள்ள வழக்கு முடிந்து ஒரு வாரத்திற்குள் பணிநியமனம் செய்ய வைப்போம் என்று தன்னம்பிக்கையுடன் கூறுங்கள்

    வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete
  15. தவளையும் மனிதனும்...

    சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

    ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

    தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும்.

    எது அந்த தவளையை கொன்றது ? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

    ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது.

    நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.

    நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது.

    ReplyDelete
    Replies
    1. Excellent, well said. That is why private school s are increased. politicians are earning money. trs status goes down.
      Now, for getting NOC to open CBSE, 50 lac is required. this is the trend of current
      govt.

      Delete
    2. As and when the population increases, the Government can not afford provision for better Education. That is why private schools are being opened in macro level.

      Delete
  16. Appa semma story akilan bro.timing ku yetha story

    ReplyDelete
  17. நண்பர்களே மாலை வணக்கம்

    நாளை நானும் எனது நண்பர்கள் 4 பேர் சென்னை செல்கிறோம் தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களுள் ஒருவரை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

    நமது பிரச்சனையை அவர்களிடம் நேரடியாக தெரிவித்து விட்டு வரப்போகிறோம்


    அவர்கள் நாளை எங்களை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து news channal கள் வாயிலாக நமது adw & piramilai kallar & pg welfare posting பற்றி அரசிடம் கேள்வி கேட்பார்கள் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நமது பிரச்சனை தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் தெரியும்

    எனவே தமிழக அரசு இந்த வாரத்திற்குள் வழக்கை முடித்தாலும் பணி நியமனத்தை அடுத்த வாரத்திற்குள் முடிக்க முயற்சி எடுக்கும் என நம்புகிறோம்


    நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும்

    நன்றி

    ReplyDelete
  18. இன்று நலத்துறை ஆய்வாளர் துணை அரசு வழக்கறிஞரை சந்தித்து இருப்பார் ஆனால் எப்போது AG ஆஜர் ஆவார் என தெரியவில்லை .
    நாளை அல்லது வெள்ளிக்கிழமை ஆஜர் ஆகலாம் என்று தெரிகிறது பார்க்கலாம்

    இனி நல்லதே நடக்கும்

    ReplyDelete
  19. நன்றி நல்ல செய்தி சென்னூர்கள் நண்பரே

    ReplyDelete
  20. Akilan avarkaley ungal vidamurchiku en vaalthukkalaiyum nanriyaiyum therivithukolkiren. Ungal vaarthai vaira varikal en ponravarkalukku thannampikai ootum varikal. Vaalga valamudan..

    ReplyDelete
  21. paper II TET passed Social Science candidate for SCA cateogry vacancy in AIded school in Tirunelveli dist .Cell 8056817432 above 90 candidates .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி