உதவியாளர், உதவி வரைவாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

உதவியாளர், உதவி வரைவாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை


சென்னை கூட்டுறவு தொழில் வங்கிக்கு உதவியாளர் பணிக்கும், ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு உதவி வரைவாளர் பணிக்கும் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு தொழில் வங்கி உதவியாளர் பணிக்கு: ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூட்டுறவு பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 1.10.2014ன் படி பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் வயது 18 முதல் 32. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில்தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் ஆதரவற்ற விதவை மற்றும் பிற்பட்டோர்களில் முன்னாள் படைவீரர்களைச் சேர்ந்தோர் உள்பட அனைவரும் பரிந்துரைக்கப்படுவார்கள். இத்தகுதிகளை உடைய பதிவுதாரர்கள் உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்படுவர்.

மாவட்ட வன அலுவலர் பணிக்கு:

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலக உதவி வரைவாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் ஐ.டி.ஐ. டிராப்ட்ஸ்மேன் சிவில் சான்றிதழ் பெற்று அதை பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 1.8.2014 அன்று ஆதிதிராவிட வகுப்பினர் வயது 18 முதல் 35 வரை. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்கள் மட்டும் ஆதிதிராவிடர் வகுப்பினர் அருந்ததியர்களில் முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

இத்தகுதிகளையுடைய பதிவுதாரர்கள் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து சான்றிதழ்களுடனும் நேரில் வந்து பரிந்துரை விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை நகராட்சியில் துப்புரவுப் பணியாளர் பணிக்கு பரிந்துரை:கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிய துப்புரவாளர் பணி காலியிடத்திற்கு 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை படித்திருப்பவராகவும், துப்புரவாளராகவும் பதிவுசெய்திருக்க வேண்டும்.கடந்த 1.1.2015 அன்று ஆதிதிராவிடர்,பழங்குடியினர் வயது 18 முதல் 35.பிற்பட்ட வகுப்பினர்,மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 18 முதல் 32.பொதுப்போட்டியாளர் வயது 18 முதல் 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை.

உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் நகராட்சி அளவில் முன்னுரிமைப் பதிவுதாரர்களும், மாவட்ட அளவில் அருந்ததியினரில் ஆதரவற்ற விதவைகள், பொதுப் போட்டியாளர் முன்னுரிமையுள்ளவர்களில் ஆதரவற்ற விதவைகள் அனைவரும் பரிந்துரை செய்யப்பட இருப்பதால், 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி