டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2015

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம்


தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும்முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை400 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' கல்வித் துறையை கலங்க வைத்துள்ளது.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. அதிகாரிகள் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடிக்கின்றனர். இதில் கல்வித்துறைஉரிய வழிகாட்ட வேண்டும். திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களின் தவறான அணுகுமுறையால் தேர்வுப் பணி நியமனத்தில்சில மாற்றங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகல்வியின் முக்கிய அங்கமான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவுரவத்தை காக்கும் வகையில் பணிகள் வழங்காவிட்டால் இனிவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் புறக்கணிப்போம் என்றார்.

மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மை மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பணி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், துறை அலுவலர்கள் பொறுப்பு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கும், அறை கண்காணிப்பாளர் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படும். இம்முறை துறை அலுவலர் பணியை உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கி அதற்கு கீழ் உள்ள அறை கண்காணிப்பாளர் பணியை முதுகலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கியுள்ளனர். உரிய 'கேடர்'படி பணிகள் ஒதுக்காததால் டி.ஆர்.பி., தேர்வுப் பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

4 comments:

 1. சென்னையில் ஆசிரியர் பணியிடம்
  OC SCIENCE 1
  SC(A) MATHS 1
  PG ZOOLOGY 1
  MBC SCIENCE 1
  BC SOCIAL SCIENCE 1
  pls contact kathir202020@gmail.com

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இடைத்தரகரா நண்பரே.
   தினமும் விளம்பரம் செய்கிறீர்.

   Delete
 2. Good morning surulivel sir
  bt second list patri ungal opinion enna
  reply sir pl
  iram

  ReplyDelete
 3. Adw case eppa hearing varuthu akilan sir. Intha ramar sudalai rendu peraal nammudaiya pani niyamanam kaala thamathama illai arasin thamatha pokku karanama. Intha valakku avasara valakkaga thaney ullthu yen ivvalavu kaalam thalthukirhu highcourt.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி