தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களின் முன்பதிவுக் கும், முன் உரிமைக்கும் முழுமையான அங்கீகாரம் இல்லாமல் போகிறது.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் பெரும் பயன் எதுவும் இல்லையோ என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தமிழ் நாட்டில் சுமார் 94 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டு காலம் வேலை இல்லாமல் காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணி இடங் களை தவிர பிற பணி இடங் களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல்பெற்று, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆணையைப் பெற முயற்சிக்க வேண்டும். அதே போல் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி