திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-இல்தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in) திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.இத்தேர்வுப் பணிகள் அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இம்முறை தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.இத்தேர்வுகளை எழுத 1,08,393 இளநிலை மாணவ, மாணவியரும், 11,073 முதுநிலை மாணவ, மாணவியரும் இணையதள வழியாக பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் இளநிலை பட்ட வகுப்பில் 7,948 பேரும், முதுநிலை பட்ட வகுப்பில் 801பேரும் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் இளநிலை பாடப் பிரிவில் 42,790 பேரும் (43 சதவீதம்), முதுநிலை பாடப் பிரிவில் 5,531 பேரும் (54 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் 826 மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இளநிலைப் பிரிவில் பி.லிட்., தமிழ் பாடப் பிரிவில் அதிகபட்சமாக 98 சதவீதம் மாணவ, மாணவியரும், முதுநிலையில் வரலாறு பாடப் பிரிவில் 100 சதவீதம் மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அனைத்தும் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கப்படும்.மறுமதிப்பீடு: இத்தேர்வில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அந்தந்தக் கல்லூரி முதல்வர் வழியாக இணையதள மூலம் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி