தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஜி.கே. வாசன் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஜி.கே. வாசன் கோரிக்கை


தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கிராமங்களில் செலவுகுறைவு என்பதால் அங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதைத் தாங்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து போராட்டத்தை தொடங்கப் போவதாகஅறிவித்துள்ளன.நகரங்களில் பணியாற்றுபவர்களைவிட கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கேஅதிக முக்கியத்துவமும், கூடுதல் ஊதியமும் வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதியான ஆசிரியர்கள் கிராமங்களில் பணிபுரிய முன்வருவார்கள்.அதிகமாக வழங்காவிட்டாலும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியமாவது வழங்க வேண்டும்.

ஊதியம் வழங்குவதில் வேறுபாடுகள் தொடர்ந்தால் கிராமப்புறங்களில் கல்வி பாதிக்கப்படும்.எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 comments:

 1. முதலில் தமிழ்நாட்டில் B.Ed and M.Ed ரெகுலர் மாணவர்கள் சரியாக கல்லூரிகளுக்கு வருவதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்தால் ஆசிரியர் கல்வி தரம் உயரும். பல கல்லூரிகளில் B.Ed and M.Ed மாணவர்கள் தேர்வுகளுக்கு மட்டுமே கல்லூரிகளுக்கு வருகின்றனர்.மற்ற நாட்களில் கம்பனி, தனியார் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

  ReplyDelete
 2. Alex sir Tripura case enna ananthu?

  ReplyDelete
  Replies
  1. Dear Mr K Mohamed Kamil

   Day by day I used to search development of Tiripura Case in WEB from 09.01.2015 which all the days passed vain. Still my search continues. As soon as I get, I would pass on public.

   Delete
  2. The hearing of 10,323 terminated teachers will now held on 15 January in Supreme Court. This was informed by the standing counsel of the state government from New Delhi on Wednesday. Earlier, the date of hearing was fixed on 9th January.

   The Supreme Court on December last stayed a Tripura High Court order to terminate the jobs of 10,323 government teachers and allowed them to continue beyond Dec 31 and until the final disposal of the case.

   A division bench of the high court, comprising Chief Justice Deepak Gupta and Justice Swapan Chandra Das, passed an order May 7 terminating the jobs of 10,323 school teachers after Dec 31, citing irregularities in recruitment.The Supreme Court would hear Jan 9 the three separate Special Leave Petitions (SLPs) filed against the high court judgment ordering the termination of the jobs.

   The SLPs were filed by the Tripura government and the teachers affected by the high court order.

   The high court also asked the state government to start a fresh recruitment process by December 2014 and frame a new employment policy within two months.

   Delete
 3. Madev sai ku birthday wishes sollirundhinga.Thank u akilan brother.yesterday kalviseithi pakkala.late ah rply pandren.sorry bro

  ReplyDelete
 4. TNTET Relaxation regarding Supreme

  Court Order


  TET - 2013 தேர்வில்

  "இடஒதுக்கீடு வழங்குமாறு

  நீதிமன்றம் உத்தரவிட முடியாது

  என்றும், அதே சமயம் மாநில அரசு

  இட ஒதுக்கீடு வழங்கி

  ஆணையிட்டால் அதில் நீதிமன்றம்

  தலையிடாது" என்றும் டிசம்பர் 13

  ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு

  வழங்கியுள்ளது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி