மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு


அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 44 மாதிரிப் பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை இந்தக் குழு பார்வையிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மண்டல கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் துரைசாமி, உலக வங்கியின் இரண்டுபிரநிதிகள் ஆகியோரும் மத்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி