தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி


தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் செ.முத்துசாமி கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்கக்கல்விஅலுவலகம் மூலம் ஊதியம்பெற்று வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வோர் மாதமும்ஒவ்வொரு அலுவலகத்திலும் 400 முதல் 600வரையிலான எண்ணிக்கை உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம்பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி மாதமே புதிய “இபேரோல்” முறையிலேயே பட்டியல்தயாரித்து வழங்கப்படவேண்டும் என்றகண்டிப்பான அறிவுறை கருவூலஅதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்,அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியகளுக்கு ஊதியபட்டியலை ஒரேமாதத்தில், அதுவும் வருமான்வரி, தொழில்வரி கணக்கிடப்படும் பிப்ரவரி மாதத்திலேயே புதிய “இ பேரோல்”செய்ய வேண்டும் என்று கருவூல அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் ஊதியம்பெறுவது பாதிக்கப்படும் ,எனவே இம்முறையை அமுல் படுத்த கால அவகாசம் கோரவேண்டும் என்று இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது அவரின் சார்பாக இணை இயக்குனர் திருமதி லதா அவர்கள், இயக்குனர் விடுப்பு முடித்து திரும்பிய உடன் இது குறித்து மாநில கருவூல அலுவலருடன் கலந்தாலோசனை செய்து காலஅவகாசம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனதெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி