புதிய வைரஸ் ஹெலுவா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2015

புதிய வைரஸ் ஹெலுவா

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் புதியதாக, வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் helluva. இது பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் ஒன்று மூலம் வேகமாகப் பரவுகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரை, வைரஸை அனுப்பியவர்கள், முழுமையாகத் தங்கள் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியும்.
தற்போதைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் தான் இது தென்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்தாலும், இது பரவலாகவே பன்னாடுகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் 8, விண்டோஸ் 7, சர்வர் 2012, விண்டோஸ் ஆர்.டி. மற்றும் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களை மிக எளிதாக இது பாதிக்கிறது.
இதில் சிக்காமல் இருக்க, நீங்கள் அறியாத ஒருவரிடமிருந்து மின் அஞ்சல் இணைப்பாக பிரசண்டேஷன் பைல் மற்றும் பிற பைல்கள் வந்தால், அதனைத் திறக்க வேண்டாம். தெரிந்தவரிடம் இருந்தே வந்தாலும், அவரைத் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திய பின்னரே, பைலைத் திறக்கவும். அதே போல, குறிப்பிட்ட பைல் ஒன்றைத் திறக்க, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை தேவை என, நீங்கள் அறியாத பைல் ஒன்றுக்குக் கேட்டால், அனுமதி தர வேண்டாம். Window’s User Account டூலை உங்கள் கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருக்கவும்.
இந்த வைரஸ் நுழையும் பிழைக் குறியீடு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் (Power Point’s OLE) சார்ந்ததாகும். இது ஸ்ப்ரெட் ஷீட் போன்றவற்றை பவர்பாய்ண்ட் பைலில் இணைக்க உதவும் குறியீடு ஆகும். பொதுவாக, இந்த டூல் சார்ந்த குறியீடு, மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கும். ஆனல், இதில் யாரோ சிலர், பிழைக் குறியீட்டு வரிகளைக் கண்டறிந்து, அதன் வழி இந்த வைரஸைப் பரப்பி வருகின்றனர். இது குறித்து, மைக்ரோசாப்ட் தரும் அறிக்கையினைப் படிக்க, https://technet.microsoft.com/library/security/3010060 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி