தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழநாடு தபால் வட்டத்தல் 836 தபால் உதவியாளர், 287 சார்ட்டிங் உதவியாளர் உள்ளிட்ட 1,200 காலி பணியிடங்கள கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங் களுக்குவிண்ணப்பித்தவர்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் கடந்த மே 11ம் தேதி முதல் கட்ட தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடந்த கம்ப்யூட்டர் தேர்வுக்குஅழைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேர்வுகள் செப்.24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. எனினும் முடிவுகள் வெளியாக காலதாமதம ஆனதால் தேர்வர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் கம்ப்யூட்டர் தேர்வு முடிந்து 5 மாதங்களுக்கு பிறகு தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியலை தமிழ்நாடு தபால் வட்டம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு கோட்டம், யூனிட் வாரியாக தேர்வு பெற்றவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி, முதல், இரண்டாம் தாள்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இனச் சுழற்சி வாரியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவு களை tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள லாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி