பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வருகிற 23-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

பிளஸ்2 தேர்வு வருகிற மார்ச் 5-ம் தேதி முதல், தொடர்ந்து 31-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 19-ம் தேதி முதல், தொடர்ந்து ஏப்.10 வரையிலும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. அதில், விடைத்தாள் முகப்பு சீட்டுக்கள் தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகள் மற்றும் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக வருகிற 23-ம் தேதி ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலையிலும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை, மின்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இதில், தேர்வு மையங்களில் இடை நிறுத்தம் இல்லாமல் மின்விநியோகம், போக்குவரத்து வசதி, தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் வைப்பறைகளில் போலீஸார் பாதுகாப்பு, தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி