மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஆதார் அட்டை பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் வெளியிட்டு செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை பதிவு, புகைப்படம் எடுப்பதற்கான நிரந்தர மையங்கள் செயல்பட்டுவருகின்றன.
கடந்த நவம்பர் முதல் மாவட்டத்தில் 20 மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிரந்தரப் பதிவு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுத்த நகல் பிரிவு அருகே உள்ள அறை (பழைய பாஸ்போர்ட் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிரந்தர தேசிய மக்கள் தொகை பதிவு மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் எஸ். சோமசுந்தர சீனிவாசன் நிமியக்கப்பட்டுள்ளார்.இந்த நிரந்தரப் பதிவு மையத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி