அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 7.2.2015 அன்று திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் RR Community hall-க்கு எதிரே உள்ள VGS Meeting Hall இரண்டாவது தளத்தில் காலை 10.00 மணி அளவில் துவங்க உள்ளது.
இக்கூட்டத்தில் ஆசிரியப்பயிற்றுநர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து ஆசிரியப்பயிற்றுநர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேவையான மற்ற ஏற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரியவிருக்கும் நண்பர்கள் தங்களது வருகையை மாவட்ட பிரதிநிதி ஒருவர் மூலம் மாநில பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார்(9444164862) அவர்களிடமும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் வட்டாரவளமைய அளவிலான பிரதிநிதி மூலம் மாவட்டத்தலைவர் திரு.அ.சுதாகர்(9976793286) அல்லது மாவட்டப்பொருளாளர் திரு.அ.சரவணக்குமார்(9486118749) அவர்களிடமும் வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கையை உறுதிசெய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாநில மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்,அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்,திண்டுக்கல் மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி