பப்பாளி இலைச் சாறு ,நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும் அரசு சித்த மருத்துவர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

பப்பாளி இலைச் சாறு ,நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும் அரசு சித்த மருத்துவர் பேச்சு


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடம் கலந்துரையாடல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர்முருகன் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட தேவகோட்டை சரக உதவி கலெக்டர்சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்குநிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்தார். டெங்கு காய்ச்சல் தடுப்புவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுசித்த மருத்துவர் பாரி பேசுகையில் ,பப்பாளி இலைச் சாறு ,மலை வேம்பு குடிநீர் ,நிலவேம்பு குடிநீர் ஆகிவற்றைகுடித்தால் ரத்த தட்ட அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் டெங்குகாய்ச்சல் படி,படியாக குறையும்.டெங்கு காய்ச்சல் கொசுவினால் ஏற்படுகிறது.

கொசுவராமல் சுத்தமாக நமது இடத்தை வைத்து கொண்டால்பெரும்பாலான நோய்கள் நம்மைநெருங்காது.நிலவேம்பு குடிநீரில் 9 வகையான மூலிகை பொருள்கள் உள்ளன.டெங்கு என்றபெயர் 1776 ம் ஆண்டில் இருந்து அறியப்படுகிறது.மழை காலங்களில்தான் அதிகமாகஇதன் தாக்கம் இருக்கிறது.ஒரு கொசு சுமார் பனிரெண்டாயிரம் முட்டைகளை இடும்.எனவேஒரு கொசுவை அழித்தால் 12,000 கொசுக்களின் உற்பத்தியை நாம் தடை செய்கிறோம்.எனவேகொசுவை ஒழித்து,அதனை வளரவிடாமால் நாம் தடை செய்ய முயற்சி எடுக்கவேண்டும்.அதற்கு நமது சுற்றுபுரத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்றுபேசினார்.பரமேஸ்வரி,மங்கையர்கரசி ,சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணி,நவீன் குமார்,காயத்ரி,சமயபுரத்தாள்,தனம் போன்ற மாணவ,மாணவிகள் மருத்துவரிடம் டெங்குதொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின் ரோட்டரி திட்டஇயக்குனர் ஆணிமுத்து ,கணேசன் ,போஸ் ,மீனாட்சி சுந்தரம்ஆகியோர் கலந்துகொண்டனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில்எராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு பதில் பெற்றதுடன்,நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரிசங்கதினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி