ஐ.சி.ஐ.சி.ஐ., யின் மொபைல் போன் வங்கி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2015

ஐ.சி.ஐ.சி.ஐ., யின் மொபைல் போன் வங்கி


மும்பையில் இளம் தலைமுறையினருக்கான மொபைல் போன் வங்கி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நேற்று துவக்கியது.'இ-வால்ட் பாக்கெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகமான இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை எளிதில் மேற்கொள்ளலாம்.
மேலும் பேஸ்புக் மற்றும் வங்கி கணக்குகள் வைத்திருக்கும் நண்பர்களுக்கு இமெயில், மொபைல் போன் மூலம் அதிகபட்சமாக ரூ.?? ஆயிரம் வரை உடனடியாக பணப்பரிவர்த்தனைசெய்ய முடியும்.அதற்கு மேல் தேவைப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில்புதிதாக கணக்கு துவங்கியோ அல்லது ஏற்கெனவே உள்ள வங்கி கணக்கை இத்துடன் இணைத்து பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். ஆன்லைனில் விசா கார்டை பயன்படுத்தும் முறையில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இந்த வசதியை பெற விரும்புவோர் 'கூகுல் பிளே ஸ்டோருக்குள்' சென்று கணக்கு துவங்கி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 'ஜீரோ பேலன்ஸ்' வசதியும் உள்ளது.

இதை துவக்கி வைத்து வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் கூறுகையில்,''இன்றைய இளைஞர்களுக்கு போகிற போக்கில் அனைத்து விஷயங்களும் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மொபைல் போன் கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டைவைகளை எளிதில் செலுத்த இந்த 'பாக்கெட்' பயன்படும். எதிர்காலத்தில் டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் வசதி மேலும் நவீனமாக்க இது உதவும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி