PGTRB: 1,868 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதிய முதுகலைபட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2015

PGTRB: 1,868 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதிய முதுகலைபட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு.


1,868 முதுகலை பட்டதாரி பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதிய தேர்வுமுடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,868 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்வு நடத்தியது. இந்த தேர்வு கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 499 மையங்களில் நடைபெற்றது. தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள்.முடிவு வெளியீடு தேர்வுக்கான வினா-விடைகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் விடைகளுக்கான நிபுணர்களுடன் கலந்துபேசி இறுதியானவிடை தேர்ந்து எடுக்கப்பட்டது. அதன்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடையும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 1:1 என்ற கணக்கில் தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்( www.trb.tn.nic.in) காணலாம். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி