பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு,தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது.
இந்நிலையில், பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வுமார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.
தேர்வு விவரம்:
* 11ம் தேதி - தமிழ்
* 12, 13ம் தேதி - ஆங்கிலம், இரண்டு தாள்கள்.
* 20ம் தேதி - கணினி அறிவியல், மின்னணு சாதனங்கள், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்கள்.
* 24ம் தேதி - உயிரியல், தாவரவியல், வணிகவியல்.
* 25ம் தேதி, இயற்பியல், தட்டச்சு, மனையியல் உள்ளிட்ட பாடங்கள்.
* 26ம் தேதி - விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்கள்.
* 30ம் தேதி - புவியியல், வேதியியல், கணக்குப் பதிவியல், ஆட்டோ மெக்கானிக் உள்ளிட்ட பாடங்கள்.அனைத்து பள்ளிகளிலும், மார்ச், 31ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும். தங்கள் மாவட்ட வாரியாக, தேர்வுக்கான பாடங்களை முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றியமைத்துக் கொள்ள, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி