தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு'. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2015

தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு'.


பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்குகருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர். விடை எழுத முடியாமல் தவிப்பு தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்துதான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர்தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத்திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.

தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச் 21ம் தேதி செய்தி வெளியானது. வினாக்கள் குளறுபடி இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும்நான்காவது கேள்விக்கு, மொத்தம் 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

4 comments:

  1. பேரன்-தாத்தா...உங்களோட கடைசி ஆசை என்ன தாத்தா? சொல்லுங்க தாத்தா!
    தாத்தா-பேராண்டி...நாங்க போட்ட டெட் கேஸ் முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கணும்டா!
    பேரன்-அய்யோ...தாத்தா இன்னும் ஒரு வாரத்துக்கு அரசு தரப்புல அவகாசம் கேட்டிருக்கு தாத்தா..?
    தாத்தா-முடிவு தெரியாமலே நான் செத்து போனா...உன்னோட பாட்டி என்ன திட்டுவாளேடா...?
    பேரன்-கடவுளே...நான் சாகிறதுக்குள்ளவாவது டெட் கேஸ் முடிவுக்கு வந்தா...நல்லா இருக்கும்........
    யுகம்..யுகமாய்...இன்னும் தொடர்கிறது டெட் கேஸ்.........2050...மேலும் சில காலம் அவகாசம் கேட்டுள்ளது அரசு தரப்பு.

    ReplyDelete
  2. asiriyer kuluvukku question edukkum pothe theriyaatha? question prepare seithe agri asiriyergale mark poda vendum entru thavarana(thavaruthalaga) question eduthathu pol ullathu?

    ReplyDelete
  3. This also trick to get 100% result getting through by Bonus mark

    ReplyDelete
  4. SARIYA SONNENGA SIR.SILA MAAVATENGALIL(RAMNAD DIST) AASIRIYERGALUKKU VALANGAPADUM THANDANAIGALANA 17(a),17(b) IL IRUNDU THAPPIKA NALLA TRICK KANDUPIDICHIRUKKANGA.MAINTAIN ALL SUBJECTS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி