தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊழியர் ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.இந்த நடைமுறையை மாற்றி மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் கணக்கிட்டு பிஎப் பணத்தை பிடிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி, ஊழியர் ஒருவரின் அனைத்து படிகள் உள்பட மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் பிஎப் தொகைபிடித்தம் செய்யும் போது அவரது பிஎப் கணக்கில் அதிக பணம் செலுத்தப்படும். அதே நேரத்தில் அந்த ஊழியரின் நிறுவனமும் அதே அளவிற்கான தொகையை பிஎப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதே நேரத்தில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பங்கை அவர்களது விருப்பத்திற்கு விட்டுவிடலாமா என்றும் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி