தமிழகத்தில் மாணவர்கள் பள்ளி-கல்லூரி செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.இலவச பஸ் பாஸை பயன்படுத்தி தமிழக அரசின் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம். ஆனால்,
மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தான் பயணம் செய்ய முடியும்.மாணவர்களுக்கு என தனியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியே பயணம் செய்கின்றனர்.அதே வேளையில் புதுவையில் மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.மஞ்சள் நிறத்தில் இயக்கப்படும் இந்த பஸ்களில் மாணவர்கள் ரூ.1 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.புதுவை மற்றும் காரைக்காலில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து புதுவையின் மைய பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் செல்லலாம்.மாணவர்களிடம் இருந்து அடையாளமாக ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் புதுவையில் 60 பஸ்களும், காரைக்காலில் 11 பஸ்களும்இயக்கப்படுகிறது.மாணவர்கள் மட்டுமே பயணம் செய்வதால் கூட்ட நெரிசலும் இல்லை. இதனால் மாணவர்கள்மட்டுமல்லாது பெற்றோர்களிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி