பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3 ஆசிரியர்கள் இடைநீக்கம்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 3 மாணவர்கள் விடைக் குறிப்பை மறைத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் பிடிபட்டதை அடுத்து, தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருந்த 3 ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முத்துத்தேவன்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 கணக்குப் பதிவியல் மற்றும் வேதியியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது.
அப்போது பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு செய்தனர். இதில், கணக்குப் பதிவியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தனித் தேர்வர் ஒருவரும், வேதியியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த இதே பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்களும் விடை குறிப்புகளை மறைத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இதையடுத்து தேர்வறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் வடிவேல், இதே பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் லட்சுமிநாராயணன், வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம் ஆகியோரை தாற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.வாசு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி