குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2015

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு


தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2015&16ம்ஆண்டுக்குஉரிய தேர்வு கால அட்டவணையை ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. இதில், குரூப் 1, குரூப் 2, விஏஓ உள்ளிட்ட 26 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதற்காக, தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளிலும்காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங் களை டிஎன்பிஎஸ்சி கேட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டுக்கான காலி பணியிடங்களின் எண்ணி க்கை இரட்டிப்பாக வாய்ப்புள் ளது. அதாவது, சுமார் 20,000 காலி பணியிடங்கள் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:இந்த ஆண்டுக்கான கால அட்டவணையில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, குரூப் 4, விஏஓவில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த பட்டியல் அரசிடம் கேட்கப்ப ட்டுள்ளது. காலி பணியிடம் குறித்த விவரம் கிடைத்தவு டன் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவுகளையும் குறைந்தபட் சம் 3 மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான (10.5 லட்சம்பேர் எழுதியது) ரிசல்ட் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். உதவி சித்தமருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை உள்ளிட்ட 74 மருத்துவர்களைதேர்ந்தெடுக்க இந்த மாத இறுதியில் அறிவிப்புகள் வெளியிடப்படும். துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட குரூப் 1 பதவியில் 47 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி