ஐ.ஏ.எஸ்., நேர்முக தேர்வு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

ஐ.ஏ.எஸ்., நேர்முக தேர்வு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


குடிமை பணிக்கான, நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் சேர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான, மத்திய தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், சென்னை பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் உள்ள, இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவங்கள், முதன்மை தேர்வு முடிவுகள்அறிவிக்கப்பட்டதும், இரண்டு அலுவலக வேலை நாட்களில், பயிற்சி மைய அலுவலகத்தில்வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும், இப்பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள்.
இப்பயிற்சி மையத்தில் படித்தவர்கள், இதர பயிற்சி மையத்தில் படித்தவர்கள், பயிற்சி மையத்தில் சேராமல், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், இப்பயிற்சியில் சேர்த்துகொள்ளப்படுவர்.தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி மையத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், மூன்று புகைப்படம், முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த, விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமர்பித்து, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, பயிற்சி அளிக்கப்படுகிறது. டில்லி செல்லும் மாணவர்களுக்கு, பயணப்படியாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். 10 நாட்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்கி, ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள, ஏற்பாடு செய்யப்படும்.மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படும் நாட்கள் குறித்த விவரம், www.civilservicecoaching.com இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு, 044 - 2462 1475 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி