ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?


அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என, தெரிகிறது. இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாது, ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதும்கூட, சிரமம் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பணம் எடுப்பது மற்றும் அனுப்புவது போன்ற விஷயங்களை, வரும் 27ம் தேதிக்கு முன் முடித்துக் கொள்வது நல்லது. காரணம், மார்ச் 28ம் தேதி முதல், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் விடப்படவுள்ளதால், வங்கிகளில், முற்றிலுமாக பணிகள் இருக்கப்போவதில்லை.இந்நிலை, ஏப்ரல் 5ம் தேதி வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது. வங்கிகளுக்குவிடுமுறை என்றாலும், ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதிலும்கூட, சிரமம் ஏற்படலாம். காரணம், பெரும்பாலான ஏ.டி.எம்.,களில், ஓரிரு நாட்களுக்கு தேவையான பணத்தை மட்டுமே, வங்கிகள் நிரப்பி வைப்பதுண்டு. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால், ஏ.டி.எம்., சேவைகளும், நிச்சயம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி