:''தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து, வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும் மூடி போராட்டம் நடத்தப்படும்,''என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 41,763 பள்ளி சத்துணவு மையங்களில்,80 லட்சம்மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு சத்துணவு வழங்க, மத்திய அரசு, தினமும், ஆறு ரூபாய் உணவுப்படி வழங்குகிறது.ஆனால், தமிழக அரசு, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, 1.70 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கு, 1.80 ரூபாய் வழங்குகிறது. இந்த பணத்தில் தான் அரிசி, பருப்பு தவிர மற்ற மளிகை சாமான், காய்கறி, விறகு உட்பட எல்லாம் வாங்க வேண்டும். பணம் போதவில்லை என கேட்டும், பதில் இல்லை. 40 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் நிரப்பவில்லை. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சத்துணவு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம், ஓய்வூதியம் வழங்கும்படி, பலமுறை அமைச்சர்கள், தலைமை செயலரை சந்தித்து மனு கொடுத்தும் பலனில்லை.
கடந்த, 2011ல், சத்துணவு பணியாளர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவித்து, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு முறையும், மாநில அரசு ஏமாற்றும் போக்கினை கடைபிடித்து வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல், 15ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் உள்ள, 41,763 சத்துணவு மையங்களையும் மூடிவிட்டு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி