தமிழக அரசு பணியில் 183 தோட்டக்கலை அலுவலர் காலியிடங்களைநிரப்புவதற்காக கடந்த 16.3.2014 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப் பட்டது.
தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அலுவலக தகவல் பலகையிலும், அதன் இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 30-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்காணலுக்கு ஒரு காலியிடத்துக்கு 2 பேர் அல்லது 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி